search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தரகாண்ட் பஞ்சாயத்து தேர்தல்"

    உத்தரகாண்டில் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாதவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இயலாது என பாரதிய ஜனதா மந்திரி தெரிவித்துள்ளார். #Uttarakhand #Panchayatpolls #BJPMinister
    டேராடூன்:

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டுவதில் மத்திய பா.ஜனதா அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    இந்த நிலையில் பா.ஜனதா ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் வீடுகளில் கழிவறை இல்லாவிட்டால் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட இயலாது என்று அறிவித்துள்ளது.

    இதுகுறித்து அந்த மாநில பஞ்சாயத்து ராஜ் மந்திரி அரவிந்த் பாண்டே கூறியதாவது:-

    பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுபவர்களின் வீடுகளில் கழிப்பறை இருப்பது கட்டாயம். வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாதவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இயலாது என்று பரிந்துரைத்துள்ளோம்.

    மேலும் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என்பது பற்றிய பரிசீலனையும் இருக்கிறது. அதோடு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதியும் நிர்ணயிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படுகிறது. #Uttarakhand #Panchayatpolls #BJPMinister
    ×